தெரிந்தெடுக்கப்பட்ட சில தொழிலதிபர்கள், வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களைத் (LCs)திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தினமும் 1,700-க்கும் மேற்பட்ட கடன் கடிதங்கள் வங்கிகளினால் அனுப்பிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வாகனங்களை இறக்குமதி செய்ய அண்மையில் அரசாங்கம் மேலதிகமாக 50 வீத கட்டணத்தை அறிவித்தது. இதன் காரணமாக வாகனம் ஒன்றின் விலை சுமார் 1.5 மில்லியன் முதல் 2.5 மில்லியன் ரூபாய் வரையில் கட்டணம் அதிகரிக்கும் என அறிவிக்கபப்ட்டது.

இதனால் வாகன இறக்குமதியாளர்கள், தாம் நெருக்கடியை சந்தித்திருப்பதாக கூறி வரும் நிலையில் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here