நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் ஒருவரை அவதூறாகப் பேசியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சுமத்திய குற்றச்சாட்டுகளை, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று சபையில் மறுத்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிடும் பெண்ணை தான் சந்தித்ததே இல்லை எனவும் இந்தப் பொய்யான குற்றச்சாட்டு தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here