கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் 17.3% சரிந்து $114.75 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது.

ஈராக்கிற்கான ஏற்றுமதி 38% சரிந்துள்ளதோடு ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஏற்றுமதி 93% சரிந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தேயிலையில் சுமார் அரைப்பங்கை, (சுமார் $680 மில்லியன்), மத்திய கிழக்கு நாடுகள் கொள்வனவு செய்கின்றன.

இந்நிலையில் தற்போது அங்கு நிலவும் போர் சூழல் , கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்து,எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளமை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு தேயிலை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதிகரித்த எரிபொருள் செலவுகள் மற்றும் விநியோகத் தடைகளால் இலங்கைக்கு ஏற்கனவே காணப்படும் பாரிய பொருளாதாரப் நெருக்கடிகளுடன், தேயிலைத் துறையின் இந்தச் சரிவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here