கடந்த 20 மாதங்களில் இலங்கை ரூபாவின் மதிப்பு பெருமளவு குறைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) எச்சரித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான மதிப்பு சுமார் 292 ரூபாலிருந்து 354 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்தகால பொருளாதாரக் கொள்கைகளைத் தொடராமை மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பை உருவாக்குவதற்கான தெளிவான திட்டம் இன்மையே இதற்கு காரணம் என அந்த கட்சி அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளது.
ரூபாவின் கட்டுப்பாடற்ற பெறுமதி வீழ்ச்சியானது சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவுகளை அதிகரிக்கும் எனவும் எரிபொருள் மற்றும் உணவு போன்ற இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பால் தொழிலாளர்களும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி குறித்து சாதகமாகப் பேசிய அரசாங்க அதிகாரிகள், மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைப் புறக்கணிக்கிறார்கள் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.








