மலையக இந்து மதகுருமார் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் டொக்டர் நந்திக சனத்குமநாயக்கவிற்கும் இடையே இன்று (26) விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

பல தசாப்தங்களாக மலையக இந்து மதகுருமார்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவற்றுக்கு முறையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதியின் செயலாளர் உறுதியளித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தொடர் கலந்துரையாடல்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மலையகப் பகுதிகளில் அபிவிருத்தி மற்றும் சமூகத் தேவைகளுக்காக அரசாங்கம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமது பிரச்சினைகளை அரசாங்கத்திடம் நேரடியாக எடுத்துரைக்க கிடைத்த வாய்ப்பை இந்து மதகுருமார் சங்கத்தினர் பாராட்டியுள்ளார்.

இக்கூட்டத்தில் சிரேஷ்ட அதிகாரிகளும் மதகுருமார்களும் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here