பேராசிரியர் கபில பெரேரா, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் அடிப்படை உரிமைகளை அவர் மீறியதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர் பதவி விளக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

பேராசிரியர் கபில பெரேரா, சத்யானந்தாவை அமைச்சின் மேலதிக செயலாளராக நியமித்துள்ளார். எனினும் அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே, அவரது சேவைகள் அவசியமில்லை என்று கூறி, அவரைப் பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனை அடுத்து,சத்யானந்தா அடிப்படை உரிமைகள் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம்,பெரேராவின் நடவடிக்கைகள் அவமானத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாகவும், அடிப்படை உரிமைகள் மற்றும் அரச நியமன விதிகள் இரண்டையும் மீறியதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பெரேரா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here