தும்பகல்ல கன்டா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையி ஒன்றின் போது, ​​பதுரலிய பொலிசார் பெருமளவு ஐஸ் (ICE) போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் 3.362 கிலோ ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனினும், இந்த போதைப்பொருள் பதுக்கலுக்குப் பொறுப்பான நபர்கள் தற்பொழுது வரையில் கைது செய்யப்படவில்லை.

சந்தேக நபர்களைக் கண்டறிந்து அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here