வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன.
அண்மைய நாட்களில் இரு நாடுகளும் மோதல் ஊடாக தமது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கான மிகச்சிறந்த இடமாக ஜெனீவா நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








