எரிபொருள் விலையை குறைக்க முடியாத சூழல் இருப்பதாக அரசு கூறுவதை முன்னாள் எம்.பி. பாட்டலி சம்பிக்க ரணவக்க நிராகரித்துள்ளதுடன் பழைய விலைக்கு கொள்வனவு செய்த எரிபொருள் இருப்பு காணப்பட்ட போதும் விலை அதிகரிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் விலை அதிகரிப்பில் முரண் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெப்ரவரியில், குறைந்த விலைக்கு பெற்ற எரிபொருள் இருப்பு காணப்பட்ட போதும் மத்திய கிழக்கு பதற்றம் ஆரம்பித்த உடனேயே விலை அதிகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பின் மூலம் அரசு ரூ. 600 கோடிக்கு மேல் சம்பாதித்தது. ஆனால் சர்வதேச எரிபொருள் விலை வீழ்ந்தபோது அதே முறைமை பயன்படுத்தப்படவில்லை.
தற்போதைய விலைக்கமைய பெற்றோல் ஒரு லிட்டர் 225 ரூபாவிற்கும் டீசல் ஒரு லிட்டர் ரூ. 240 ரூபாவிற்கும் இறக்குமதி செய்யலாம் எனவும் அவர் கூறினார்.
மேலும் விலை நிர்ணய சூத்திரம், இறக்குமதி செலவு, விற்பனை விலை, வரி விவரங்களை 2023-2024 காலப்பகுதி போல வெளிப்படையாக அறிவிக்குமாறு அவர் மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.








