ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் (SLMC) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூஃப் ஹக்கீம், நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் உள்ள தமிழ்நாடு செயலகத்தில், தமிழகத்தின் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை சந்திப்பதற்காக, இலங்கையின் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விரைவில் கூட்டாக தமிழகத்திற்கு வருகை தருவார்கள் என்றும் ஹக்கீம் தமிழக அமைச்சரிடம் தெரிவித்தார் என கூறப்படுகிறது.
சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை, தமிழக அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது ஆகியவை குறித்து இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின என மேலும் தெரிவிக்கப்படுகிறது.







