களுத்துறை மொரகஹஹேன காவல் பிரிவின் கோரலைமா பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வங்கியில் இன்று அதிகாலை, மூன்று சந்தேக நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அதிகாலை சுமார் 1.00 மணியளவில், குறித்த கும்பல் வங்கி வளாகத்திற்குள் நுழைந்து, பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளைக் கயிற்றினால் கட்டியுள்ளதோடு, கட்டிடத்தின் பின்புறம் உள்ள கழிவறையின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, சந்தேக நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து நகைகளைத் களவாடிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.







