தெல்தெனியவில் காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இயன் மருத்துவரின் சடலம் தொடர்பாக, பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு சந்தேக நபர்களையும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில், கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி (OIC), மற்றும் குண்டசாலை பிரதேச சபையுடன் தொடர்புடைய சாரதி ஆகியோர் அடங்குகின்றனர்.

சந்தேக நபர்களை இன்று நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜூன் 17 ஆம் திகதி தெல்தெனிய மருத்துவமனை அருகே ஒரு காருக்குள் இயன் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

நுவரெலியாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலிருந்து பிரதான சந்தேக நபர் அப்பெண்ணின் உடலை அப்புறப்படுத்துவதையும், அதன் பிறகு தெல்தெனியவில் காருக்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையும் காட்டும் சிசிடிவி காட்சிகளை பொலிஸ் விசாரணையில் கண்டறிந்தது.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here