வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின.
இந்த பேரழிவால் அதிக மக்கள் தொகை கொண்ட லா குயைரா கடற்கரை மாகாணம் முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு தலைநகர் கராகஸ் நகரம் முழுவதும் கட்டிடங்கள் பரவலாக இடிந்து விழுந்தன.
இந்த நிலையில் வெனிசுலாவின், சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் ரொட்ரிக்ஸ், இன்று சனிக்கிழமை நிலவரப்படி அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 1,430 ஆக பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் குறைந்தது 3,238 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








