நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் சிறைச்சாலை அதிகாரிகளும் கைதிகளும் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் உள்ளவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறைச்சாலை முறைமைக்குள் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஏற்பட்ட தவறுகளுக்கு அமைச்சரை நேரடியாக பொறுப்புக்கூறச் செய்யும் நோக்கில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவதாக எதிர்க்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.








