ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை , அடுத்த அறிவிப்பு வரும் வரை கடல் வழி மூடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

சைப்ரஸ் கொடி கொண்ட கப்பல் ஒன்று அங்கீகரிக்கப்படாத கடல் வழியில் பயணித்தபோது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூட ஈரான் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அந்த கப்பல் மீதான தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா தற்போது ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரானும், அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும், பிராந்தியத்தில் உள்ள புதிய அமெரிக்க தளங்களும் இலக்கு வைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதேநேரம் இந்த வாரத்தில் ஓமான் கடல் எல்லை வழியாக அமெரிக்கா பரிந்துரைத்த பாதையில் சென்ற 3 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரானுக்கு எதிராக தாம் மூன்றாம் சுற்று தாக்குதல்களை நடத்தியதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த வாரத்தில் வணிக கப்பல்கள் 3-க்கு ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்தே அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here