உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான அரசின் நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது எனவும், இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், இந்த முன்மொழிவை “இழிவான மற்றும் வெட்கக்கேடான” அரசியல் நோக்கிலான முயற்சி என தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் ஜனநாயக அமைப்புக்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இது அமையும் என்பதால் தமது கட்சி தொடர்ந்தும் இந்த முன்மொழிவை எதிர்க்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம் இந்த முன்மொழிவை எதிர்த்து நீதிபதிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக வெளியான தகவலை வரவேற்ற காரியவசம், ஜனநாயக சமூகத்தில் நீதிபதிகளே இது தொடர்பில் கவலை வெளியிடுவதை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த முன்மொழிவை எதிர்ப்பதற்காக ,எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்குமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் இதன்போது நினைவூட்டினார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தமது கட்சி உறுதியாக உள்ளதாகவும், எந்த அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியிலும் இந்த முன்மொழிவை தொடர்ந்து எதிர்ப்போம் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் மீண்டும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here