கினிஹத்தேன மற்றும் ஹட்டன் பகுதியை அண்மித்த பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காணாமல் போயிருந்த 2 பெண்கள் மற்றும் 1 ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனுடன் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக வீட்டின் மீது மண்மேடு சரிந்ததை அடுத்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here