நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் திடீர் மண்சரிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படை 171 அனர்த்த நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த குழுக்களில் 700 கடற்படை வீரர்கள் உள்ளனர்.

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி, தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு இந்த குழுக்கள் தயாராக இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடுமையான வானிலை நாட்டின் பல பகுதிகளை பாதித்து வரும் நிலையில், மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கும் பொதுமக்களுக்கு உதவுவதற்கும் நிவாரண பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்படை மேலும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here