ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையான சூரிய கிரகணம் தெரியவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

1905-ம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினில் ஏற்படவுள்ள இந்த முழு சூரிய கிரகணம், எதிர்வரும் ஓகஸ்ட் 12-ம் திகதி வானில் தோன்றும் என சர்வதேச ஊடகங்கள் நாசா வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கிரகணம் ஸ்பெயின் மாத்திரமன்றி, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளிலும் முழுமையாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால், சூரியன் முழுமையாக மறைக்கப்படுவது சூரிய கிரகணம் எனப்படுகிறது.

அப்போது பகல் நேரமாக இருக்கின்ற சந்தர்ப்பத்திலும் வானம் மாலை நேரம் போல இருட்டாக மாறும். இதனால் விலங்குகளின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2024-ல் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும், 2021-ல் அண்டார்டிகாவிலும், 2019-ல் சிலி நாட்டிலும் முழு சூரிய கிரகணம் தெரிந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here