சர்வதேச யானைகள் தினம் இன்று (12) அனுசரிக்கப்படுகிறது.

இலங்கையின் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில்,  சுற்றுச்சூழல் அமைப்பையும் உயிர்பல்வகைமையும் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கும் யானைகள், மனித நடவடிக்கைகளால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிடப்படாத அபிவிருத்தி காரணமாக யானை வழித்தடங்களும் பாரம்பரிய இடப்பெயர்வு பாதைகளும் தடைப்பட்டு, அதனால் பாரதூரமான சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் நீதி மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே சிங்கள ஊடகமொன்றுக்கு இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் ஆண்டுதோறும் 400-க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்படுகின்றன. அதேவேளை யானை-மனித மோதல் காரணமாக ஆண்டுக்கு கிட்டத்தட்ட 200 மனிதர்கள் உயிரிழக்கின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை 180 யானை உயிரிழப்புகளும், 56 மனித உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

குறித்த யானை உயிரிழப்புக்களில் சுமார் 75 யானைகள் மனித செயல்களால் இறந்துள்ளன. அதில் 30 யானைகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளன, 23 யானைகள் மின்சாரம் தாக்கியும், 19 யானைகள் ‘ஹக்கா பட்டாஸ்’ எனப்படும் வெடிபொருட்களாலும் கொல்லப்பட்டுள்ளன.

இதேவேளை மனிதர்களும் யானைகளும் நாட்டின் நிலப்பரப்பில் 40% க்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ளதால் யானை-மனித மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாக அவர் கூறினார்.

அதிகரித்து வரும் மோதலை குறைக்க தனது அமைப்பு முன்மொழிந்த முறையான செயல்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here