வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கன’என்பவரின் இலங்கை போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வந்த முக்கிய நபர், போதைப்பொருள் தொகையுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த படையணியின் விசேட நடவடிக்கை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு ஹோமாகம பகுதியில் உள்ள ஹைலெவல் வீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 800 போதை மாத்திரைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 44 வயதுடைய ஹோமாகம பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ‘ககன’ என்பவரின் நேரடி உத்தரவின் பேரில், இவர் இலங்கையில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை மிகவும் இரகசியமாக நீண்ட காலமாக நடத்தி வந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here