ஜப்பானில் இலங்கை பிரஜை ஒருவர் மற்றுமொரு இலங்கை பிரஜையை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘ஜப்பான் டுடே’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜப்பானின் நாகரேயாமா நகரில் 21 வயதான சக இலங்கையரை கத்தியால் குத்திக் கொன்ற குற்றச்சாட்டில் 18 வயதான இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் ஒரே விடுதியில் வசிக்கும் சர்வதேச மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (11) காலை 10:20 மணியளவில், அவர்கள் வசித்த வீட்டினுள் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.

சந்தேக நபரே அவசர சேவைக்கு (119) அழைப்பு விடுத்த நிலையில் காயமடைந்தவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பின்னர் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே 18 வயது மாணவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். அவர் தான் தாக்கியதாக ஏற்று கொண்டுள்ளார்.

விசாரணையில் சந்தேக நபர்:”ஓரினச்சேர்கையாளர்களை இழிவாக குறிப்பிடும் வார்த்தையால் என்னை அழைத்தார், என் தாயை அவமதித்தார், மேலும் என்னை குத்தினார். அதனால் கோபத்தில் நான் குத்தினேன்”_ என வாக்கு மூலம் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கொலை சம்பவத்திற்கான முழு சூழ்நிலைகள் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here