பீகார் மாநிலம் லகிசராய் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவில் வளாகத்தில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்த நிலையில் மக்கள் பதற்றமடைந்து ஓடியமையே இந்த நெரிசலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பீகார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








