இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்க தொடரை அடுத்து இன்று (17)மீண்டும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவிற்புக்கமைய, இன்று அதிகாலை புளோரஸ் பகுதியில் ரிக்டர் அளவில் 5.9 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் 7.7 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல அதிர்வுகளும் பதிவாகின.

அந்த நிலநடுக்கத்தில்:47 பேர் உயிரிழந்தனர் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு முகாம்களில் 9,200க்கும் அதிகமானோர் தங்கியுள்ளனர்

நிலநடுக்கத்தை அடுத்து அந்நாட்டின் சுற்றுலா பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்தோனேசிய துறைமுக அதிகார சபை கடல் போக்குவரத்து சேவைகளையும் இடைநிறுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here