மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கினியா நாட்டின் தலைநகர் கொனகெரியில் ‘டார் எஸ் சலாம்’ என்ற பகுதியில் குப்பை மேடு ஒன்று சரிந்துள்ளது.

குறித்த குப்பை மேடு அருகே மக்கள் குடிசை அமைத்து வசித்து வந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

நேற்று 23 அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் பெய்த கனமழையால் குப்பை மேட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அருகில் இருந்த குடிசைகள் மண்ணில் புதைந்தன.

இதில் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர் எனவும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here