யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் [26]  குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக கடந்த [23] சனிக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் உறவினர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்படி, எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என அறிக்கையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த மாணவியின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here