கனடாவின் தெற்கு ஒட்டாவாவிலுள்ள  பார்ஹேவன் புறநகரின் வீடொன்றில் இலங்கையை சேர்ந்த குடும்பத்தினரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன .

குறித்த  சம்பவத்தில் தாயும் அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும்  உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகளின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அத்துடன் குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்  கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோடி சொய்சா என்ற இலங்கையர் என  தெரிவித்துள்ளதுடன் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here