2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றிருந்தன.
அதன் முதலாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் டெல்லி கெப்பிடஸ் (Delhi Capitals) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் டெல்லி கெப்பிடஸ் (Delhi Capitals) அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
டெல்லி அணி சார்பாக டேவிட் வார்னர் (David Warner) 52 ஓட்டங்களையும், ரிஷப் பண்ட் (Rishabh Pant) 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
பந்து வீச்சில் மதீஷ பதிரன (Matheesha Pathirana) 3 விக்கட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) மற்றும் முஸ்தஃபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) ஆகியோர் தலா 1 விக்கட்டையும் சென்னை சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
சென்னை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane) 45 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
டெல்லி அணிக்கு முகேஸ் குமார் (Mukesh Kumar), 3 விக்கட்டுக்களயும், ஹலீல் அஹ்மட் (Khalil Ahmad) 2 விக்கட்டுக்களையும் அக்ஷர் படேல் (Axar Patel) ஒரு விக்கட்டையும் பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக டெல்லி வீரர் ஹலீல் அஹ்மட் (Khalil Ahmad) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் டெல்லி அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது நிலையில்








