யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பட்டா ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுமே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக  விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here