காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

இதன்போது இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்த  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று(16) செவ்வாய்க்கிழமைஅதிகாலை 4.00 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் காணி ஒன்றில் உயிர்மாய்த்துள்ளளார்.

இந்நிலையில், யுவதியும் யுவதியின் தாயாரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்  இது குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here