அராலியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயத்தை ஏற்படுத்திய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கணவன் – மனைவி ஆறு வருடங்களாக பிரிந்து இருக்கின்றனர். இந்நிலையில் வன்னியில் வசிக்கும் மனைவி, யாழ்ப்பாணம் – அராலியில் உள்ள அவரது அக்காவின் வீட்டிற்கு வந்து செல்வது வழமை.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான பெண், புது வருட கொண்டாட்டத்திற்காக சகோதரி வீட்டுக்கு வந்திருந்த நிலையில் கணவனால் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்த சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here