இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதில் அதிகமான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு டெங்கு நோயுடன் பதினாவர்களின் எண்ணிக்கை 17,779 ஆகும்.
இரண்டாவதாக அதிக நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 16,665 ஆகும்.
டெங்கு நோயை தவிர்ப்பதற்கு வீடுகளிலும் சுற்றுப்புறத்திலும் தேங்கும் நீரை அகற்றி, வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யுமாறும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுங்கள் எனவும் சுகாதார துறை பொதுமக்களிடம் கேட்டு கொண்டுள்ளது.







