வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக  (25) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1000மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர் படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here