நாடு முழுவதிலும்  தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றமையால்  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார்  150 மில்லிமீற்றர் வரையிலான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார்  30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here