தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக தேர்தலை நடத்தி மக்களின் ஐனநாயக்கத்தை உறுதிப்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் (17.07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டாவாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு மக்களின் ஐனநாயக உரிமைக்கு சந்தர்ப்பம் வழங்காது தேர்தலை இழுத்தடிக்காது உடனடியாக தேர்தலை  நடத்த வேண்டும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதேயாகும் ஜனநாயக முறைப்படி மக்கள் தங்கள் விரும்பிய ஒருவரை தெரிவு செய்துக்கொள்ள உரித்துள்ளவர்கள்  என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here