இந்தியா, கர்நாடகாவில் நாளுக்கு நாள் டெங்கு பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தார்வார் மாவட்டம், மம்மிட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால் லமாணி என்பவரின் 5 மாத பெண் குழந்தையான ஆராத்தியா கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி 5 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








