பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதிப் பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆணைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்  யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவரும் வாழ் நாள் பேராசிரியருமான பரமு புஷ்பரட்ணம் தலைமையில் யாழ் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் பொழுது ஆனைக்கோட்டை அகழ்வாய்வு குறித்த அனுபவ பகிர்வும்  தொடர்ந்து அகழ்வு பணியில் பணியாற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், இதன் பொழுது ஜேர்மன் தொல்லியலாளர் கலாநிதி அரியானி,பிரதம விருந்தினராக மருத்துவ பீட முன்னாள் பீடாதிபதியும் பேராசிரியருமான சுப்பிரமணியம் ரவிராஜ், தொல்லியல் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் கலாநிதி எச் .நிமால் பெரேரா , தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் திரு யு.ஏ பந்துல ஜீவ , பேராசிரியர்கள் ,சிரேஷ்ட விரிவுரையாளர்கள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here