2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் ஆரம்ப சுற்று போட்டிகளுக்கான இலங்கை அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து முதல் நிகழ்வு எதிவரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற இளம் இலங்கை வீரர் வீரேன் நெட்டசிங்க, பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்று இலங்கை அணியின் ஆரம்ப சுற்று போட்டியை தொடங்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அடுத்த வாரத்தில் இலங்கை நீச்சல் வீரர்களான கங்கா செனவரத்னே மற்றும் கைல் அபேசிங்க ஆகியோர் நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

மேலும்  ஆகஸ்ட் மாதம்  நடைபெறவுள்ள தடகளப் போட்டியில் தருஷி கருணாரத்ன, பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கையின் உயர்தர தடகள வீராங்கனை தில்ஹானி லேகம்கே மற்றும் தடகள வீராங்கனை அருண தர்ஷனா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here