கண்டி மத்திய சந்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு மோசடி தொடர்பான விபரங்களை கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது ஹோட்டலின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த ஊழியர் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கண்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கண்டி மத்திய சந்தையினுள் நீண்ட காலமாக இந்த கசிப்பு வியாபாரம்   இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில்,  இது தொடர்பில் கண்டி மாநகர சபையின் ஊடாகவும் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here