இன்று ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டியில்  32 விளையாட்டுப் போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களம் காண்கின்றனர்.

இந்த 2024 -ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்க உள்ளன. அதில் ஆப்ரிக்காவில் இருந்து 54 நாடுகளும், ஐரோப்பாவில் இருந்து 48 நாடுகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து 41 நாடுகளும், ஆசியாவில் இருந்து 44 நாடுகளும் பங்கேற்க உள்ளது. மேலும், மொத்தமாக 2,900 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 6 இலங்கை வீர – வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here