வெசாக் பண்டிகைக்காக நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 2,388 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) காரியாலயங்கள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது மே 29 வரை தொடரும் என்றும் சங்கத்தின் செயலாளர் சமில் முதுகுட கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் சுகாதார மருத்துவ அலுவலர் காரியாலயங்கள் மூலம் நாடு முழுவதும் தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கைகளை தொடங்கியதாக முதுகுட கூறினார்.

‘நேற்றையதினம் வரையில் (22) நாடு முழுவதும் சுமார் 2,388 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பதிவுப் பணிகள் வெசாக் பௌர்ணமிக்கு முந்தைய நாள் வரை தொடரும்’.

தானசாலைகளை நடத்தத் திட்டமிடும் அமைப்பாளர்கள், பதிவு செயல்முறையை முடிந்தவரை விரைவாக முடிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

எவரேனும் தானசாலையை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டிருந்தால், அதை சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அலுவலர் காரியாலயத்தில் கூடிய விரைவில் பதிவு செய்யுமாறு அவர் கேட்டு கொண்டுள்ளார்.

வெசாக் பண்டிகையின் போது உணவு மற்றும் பானங்களை விநியோகிக்கும் சந்தர்ப்பத்தில், ​​முறையான சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரத் தரங்களைப் பேணுவது குறித்து ஏற்பாட்டாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக முதுகுட குறிப்பிட்டார்.

பதிவு நடைமுறைகளை நிறைவு செய்வதற்கும், தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும், அந்தந்த சுகாதார அலுவலர் காரியாலயத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வாளரை (PHI) சந்திக்குமாறு அவர் மேலும் ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here