வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் கட்டாக்காலி கால்நடைகளால் தையிட்டி மயிலிட்டி பகுதிகளில் கால்நடைகளால் விவசாயம் பாதிப்படைவதாகவும் போலீசார் மற்றும் உரிய திணைக்களங்கள் இவ்விடயத்தில் அசமந்த போக்காக காணப்படுவதாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.

30 வருட யுத்தத்தின் மீள்குடியேறிய நமது கிராமத்தில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இக் கட்டாக்காலி கால்நடைகள் பெரும் சேதத்தை விளைவிக்கின்றன .

அத்தோடு மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான மண் அகழ்வுகள் நடைபெறுவதாகவும் இதனை ஆதாரபூர்வமாக பொலிசாரிடம் பிடித்து கொடுத்த போதும் போலீசார் இவ் விடயத்தில் அக்கறையில்லாமல் செயல்படுவதாகவும் இவர்கள் குற்றச்சாட்டினர். எனவே உரிய தரப்பினர் விடயத்தில் அக்கறை கொண்டு உழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here