கைப்பேசியை திருடிய ஒருவரும் அதனை வாங்கிய ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னாதிட்டி பகுதியில் சமுர்த்தி அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தரது தொலைபேசியானது வீதியில் தவறுதலாக விழுந்த நிலையில் அந்த இடத்தில்  நின்றவர் அதனை எடுத்து சென்றுள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் சிறிது தூரம் சென்று பார்த்த பொழுது தொலைபேசியை காணவில்லை. மறுபடியும் அந்த இடத்திற்கு வந்து தேடிய பொழுது தொலைபேசி கிடைக்கவில்லை. பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் cctv  கமரா உதவியுடன் குறித்த நபரை இனம் கண்டு பொலிஸார் கைது செய்து விசாரணையை முன்னெடுத்த நிலையில் அவர் அந்த கைப்பேசியை இன்னொருவருக்கு விற்றதாக கூறியுள்ளார். பின்னர் பொலிஸார் கைப்பேசியை வாங்கியவரையும் கைப்பேசியுடன் கைது செய்துள்ளனர்.

ஒருவர் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றவர் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்தது. குறித்த கைப்பேசி 76000 ரூபா பெறுமதி வாய்ந்ததாகும். யாழ்ப்பாண தலமை பொலிஸ் நிலையத்தில் பாரபடுத்தி மேலதிக விசாரணையின் பின்னர் அவர்களை யாழ் நீதிமன்றில் முற்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here