வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருனியாவத்தை பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டி, குருனியாவத்தை பகுதியில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞரே கைதாகியுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here