கிளிநொச்சி அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட வன்னேரி குளம் ஐயனார்புரம் பகுதியில் உள்ள கிராமத்தில்  தற்பொழுது சில தினங்களாக முதலைகள் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மேலும்  25.07.2024 அன்றைய தினமும் மூன்று குரங்குகளை முதலை பிடித்து உண்டதாகவும் இதன் காரணமாக இப்பகுதியில் இருக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

அத்துடன் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தமது நாளாந்த கடமையை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக 27.07.2024 அன்றைய தினம் கிளிநொச்சி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

நேற்று மாலை சம்பவ இடத்துக்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் முதலையினை பாதுகாப்பாக பிடித்து அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு அகற்றுவதற்கு நடவடிக்கை  மேற்கொண்டனர்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here