ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி, எதிர்வரும் 31ஆம் திகதி, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரேயொரு சட்டபூர்வமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே உள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கையில் இருப்பதாக சிலர் கூறுகின்ற கருத்துக்கள் செல்லுபடியாகாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here