யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி வடமேற்கு முருகன் கோவிலடி அறிவகம் சன சமூக நிலையத்தின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான முகாம் ஒன்று நேற்று27/07/2024 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அறிவகம் சன சமூக நிலைய தலைவர் பிரபாகரன் சரணிகன் தலமையில் நேற்று காலை 9:30 மணியளவில் இடம் பெற்ற இக் குருதிக்கொடை நிகழ்வில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர் குருதியை பெற்றனர்.
இதில் அதிகளவான அறிவகம் சன சமூக நிலைய உறுப்பினர்கள் குருத்திக்கொடையளித்தனர்.
இதேவேளை எதிர்வரும் 4/8/2024 நேற்று அறிவகம் சனசமூக நிலையத்தவர்களுக்கான மரதன் ஓட்டம், கயிறிழுத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.
குறித்த அறிவகம் சனசமூக நிலையத்தின் நாளாந்த பணியாக வீதியால் வருகின்ற மாடுகள், ஆடுகளுக்கான தண்ணீர் வசதி இருபது வருடங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பலராலும் பாராட்டப்பட்டுவருகின்றது.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.








