இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்பட பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

​​இஸ்ரேலில் தற்போது 11,000 இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் 30 வீதமானோர் விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here