இலங்கையின் நாளாந்த முட்டை நுகர்வு கடந்த சில நாட்களில்  அதிகரித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொல்லவத்த சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இறைச்சி மற்றும் மீன்களின் விலை அதிகரிப்புடன் மக்கள் முட்டை பாவனைக்கு மாறியுள்ள நிலையில் ஹோட்டல்களின் அதிக தேவையினால் தினசரி முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி தினசரி மூன்று மில்லியன் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here