மன்னார் “சதோச” மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் புதன் கிழமை (07.08) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கலந்துரையாடல் வடிவில் குறித்த வழக்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன் போது அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ,பேராசிரியர் ராஜ்சோமதேவ், காணாமல் போனோர் சங்க பிரதிநிதிகள், OMP அலுவலக பிரதிநிதிகள் உள்ளடங்கியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது நீதிமன்றத்தால் பல்வேறு கட்டளைகள் ஆக்கப்படிருந்தது. குறிப்பாக பேராசிரியர் ராஜ்சோமதேவ் தலைமையில் சதோச மனிதபுதைகுழி பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஸ்கான் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், சதோச மனிதபுதை குழியில் மீட்கப்பட்ட என்புகள் மற்றும் பிறபொருள் மாதிரிகளை வெவ்வேறாக பிரிப்பதற்கான தீர்மானமும் அத்துடன் என்புகளை பால், வயது மரணத்திற்கான காரணம் தொடர்பில் ஆரய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அதே நேரம் ஏனைய சான்று பொருட்களை பேரசிரியர் ராஜ்சோமதேவ்விடம் கையளிக்குமாறும் கட்டளை அக்கப்பட்டது.
குறித்த வழக்கு மேலதிக விசாரனைகளுக்காக அக்டோபர் மாதம் திகதியிடப்பட்டுள்ளது.







